கொத்து கொத்தாக 50 உயிரிழப்புகள்.."சுதந்திர தின நிகழ்ச்சியே வேண்டாம்"

x

இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவால் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்துள்ளார். மாண்டியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் அடித்துச் செல்லப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருதாக அவர் கூறியுள்ளார். இந்த கோர சம்பவம் காரணமாக இமாச்சலப்பிரதேச மாநிலத்தில், சுதந்திர தின கொண்டாட்த்திற்காக கலை நிகழ்ச்சிகள் ஏதும் நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்