ஜன.16ம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினம் - தொழில் முனைவோர்களிடம் கலந்துரையாடிய மோடி

ஜனவரி 16ம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினம் கொண்டாடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
x
ஜனவரி 16ம் தேதி தேசிய ஸ்டார்ட் அப் தினம் கொண்டாடப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். புதிய தொழில் முனைவோர்களிடம் பேசிய  பிரதமர் மோடி, புதிதாக தொடங்கப்படும் தொழில்முனைவோர் இந்தியாவின் முதுகெலும்பாக உருவாகி வருவதாக குறிப்பிட்டார்.  இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை கடக்கும் போது  ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்றார். நாட்டின் புதிய கண்டுபிடிப்பாளர்கள் உலகளவில் இந்தியாவை பெருமையடைய செய்வதாகவும் புகழ்ந்தார். கடந்த பத்தாண்டுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியால் அரசு நடவடிக்கையிலும், சுற்றுச்சூழலிலும்,  கண்டுப்பிடிப்புகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்