65 வயதில் காதலியை கரம்பிடித்த முதியவர்...
பதிவு : டிசம்பர் 04, 2021, 04:44 AM
ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் போன்று, கர்நாடகாவில் 65 வயது முதியவர், தனது இளமைக்கால காதலியை தேடிச் சென்று கரம்பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜ்கிரண் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் போன்று, கர்நாடகாவில் 65 வயது முதியவர், தனது இளமைக்கால காதலியை தேடிச் சென்று கரம்பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

இளமைக்காலம் முதல் காதல் முதுமையிலும் எவ்வளவு ஆழமாக இருக்கும் என்பதை பிரதிபலித்திருக்கும் 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி திரைப்படம்...

படத்தில் ராஜ்கிரண் தன்னுடைய இளமை கால காதலியை தேடிச் சென்று சந்திப்பார். இதுபோன்றதொரு சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியிருக்கிறது. 

மாண்டியா மாவட்டம் மேலக்கோட்டையை சேர்ந்த 65 வயது முதியவர் சிக்கண்ணா... தன்னுடைய சிறு வயதில் ஜெயம்மா என்பவரை காதலித்துள்ளார். இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு எழவும் ஜெயம்மா வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துள்ளார். ஆனால் அந்த வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை. குழந்தையில்லாததால் அவருடைய கணவர் பிரிந்து சென்றுவிட்டார். 

இதற்கிடையே ஜெயம்மா நினைவில் வாழ்ந்துவந்த சிக்கண்ணாவும் ஊரைவிட்டு வெளியேறியிருக்கிறார். சுமார் 35 ஆண்டுகள் கழித்து தன்னுடைய காதலியின் நிலை சிக்கண்ணாவுக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து ஜெயம்மாவை தேடிச் சென்றிருக்கிறார். இருவருக்கும் இடையிலான பரஸ்பர அன்பு அப்படியே தொடர்ந்திருக்கிறது. 
 
பவர் பாண்டி படத்திலும் ராஜ்கிரணும், ரேவதியும் பரஸ்பர அன்பை வெளிக்காட்டியிருப்பார்கள். இறுதியில் இயல்பு மீறாமல் பக்குவமான முறையிலும் முடிக்கப்பட்டு இருக்கும். 

ஆனால், பெங்களூருவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் மேலக்கோட்டை கோயிலில் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர். 

முதுமையிலும் அன்பு மாறாமல் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க இருவரும் திருமணம் செய்துகொண்டதை பலரும் பாராட்டி வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

(14.12.2021) ஆயுத எழுத்து - எதிர்கட்சிகளை வீழ்த்துமா வாரணாசி வியூகம்?

466 views

யாரை மிரட்டுகிறது வடகொரியா? - புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை

ஒருபக்கம் வறுமை, பஞ்சம், உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி என தள்ளாடினாலும் மறுபக்கம் புத்தாண்டில் முதல் ஏவுகணை சோதனை நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது வடகொரியா.

98 views

கண்களை கவர்ந்த மோகினி ஆட்டம் - கண்டுகளித்த சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரம் நாட்டிய விழாவில் கேரளா கலா மந்திரம் குழவினரின் மோகினி ஆட்டத்தை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.

39 views

இந்தியாவில் 2.50 லட்சத்தைக் கடந்த தினசரி பாதிப்பு !

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

38 views

151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா ! | #ThanthiTv

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

11 views

பிற செய்திகள்

"மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்" - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

13 views

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (19/01/2022) | Morning Headlines | Thanthi TV

20 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19/01/2022) | Morning Headlines | Thanthi TV

15 views

சர்வதேச ரோமிங் சிம் கார்டுகள் - தொலைத்தொடர்பு கொள்கை மாற்றியமைப்பு

சர்வதேச ரோமிங் சிம் கார்டுகள் குறித்த தொலைதொடர்பு கொள்கையை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது.

11 views

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-01-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

14 views

PRIME TIME NEWS | ஆஸ்கர் தளத்தில் ஜெய்பீம் முதல்... பூமியை நோக்கி வரும் ராட்சத சிறுகோள் வரை... இன்று (18-01-2022)

PRIME TIME NEWS | ஆஸ்கர் தளத்தில் ஜெய்பீம் முதல்... பூமியை நோக்கி வரும் ராட்சத சிறுகோள் வரை... இன்று (18-01-2022)

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.