கூடங்குளம் அணுகழிவுகள் - மத்திய அரசு விளக்கம்

கூடங்குளம் அணுகழிவுகள் எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அணுமின் நிலைய வளாகத்துக்கு உள்ளே, சேமித்து வைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
x
இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட அணு கழிவு எரிபொருள் ரஷ்யாவுக்கு முழுவதுமாக திருப்பி அனுப்படவில்லை என கூறியுள்ளது. அதே வேளையில் பயன்படுத்தபட்ட எரிபொருளை  மூடிய சுழற்சி தொழில்நுட்பம் மூலமாக ஆற்றலை பெற இந்தியா மீண்டும் பயன்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளது. பயன்படுத்தப்பட்ட எரி பொருளை பூமியின் ஆழமான பகுதியில் பாதுகாப்பாக வைத்து சேமிக்க வேண்டிய  கட்டாயம் இப்போதைக்கு தேவையில்லை என குறிப்பிட்டுள்ளது. பயன்படுத்தபட்ட எரிபொருள்  நிலநடுக்கம்,சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாத வகையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதே போல், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்திலும் அணுகழிவு சேமித்து வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு முறை எந்த வகையிலும் மக்களுக்கும் சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்