மோடி செல்லும் விமானத்தின் மதிப்பு ரூ.8,000 கோடி - பிரதமர் மோடியை சாடிய பிரியங்கா காந்தி

8ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் பயணிக்கும் பிரதமர் மோடி, விவசாயிகளின் கடன் பற்றி பேச தயங்குவதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.
மோடி செல்லும் விமானத்தின் மதிப்பு ரூ.8,000 கோடி - பிரதமர் மோடியை சாடிய பிரியங்கா காந்தி
x
8ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள விமானத்தில் பயணிக்கும் பிரதமர் மோடி, விவசாயிகளின் கடன் பற்றி பேச தயங்குவதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார். உத்திபிரதேசத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அவர், பிரதமர் மோடியின் நண்பர்களான தொழிலதிபர்கள் ஒரு நாளைக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வருமான ஈட்டுவதாகவும், ஆனால் சாதாரண மக்களின் ஒரு நாள் கூலி 27 ரூபாயாக இருப்பதாகவும் விமர்சித்தார். மோடி பயணிக்கும் விமானத்தின் மதிப்பு 8 ஆயிரம் கோடி ரூபாய் என்ற பிரியங்கா காந்தி, மக்களின் வருமானம் உயரவில்லை என்றார். மேலும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி தயங்குவதாகவும் குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்