அனைத்துக்கட்சி கூட்டம் : "இடையூறு இல்லாத விவாதத்துக்கு தயார்" - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு

டெல்லியில், குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
அனைத்துக்கட்சி கூட்டம் : இடையூறு இல்லாத விவாதத்துக்கு தயார் - மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு
x
நாளை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளின் கூட்டம், நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கூட்டத்தில் 31 கட்சிகள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 42 தலைவர்கள் பங்கேற்றதாக குறிப்பிட்டார். கூட்டத்தொடரில் இடையூறு இல்லாத விவாதத்திற்கு அரசு தயாராக உள்ளதாகவும் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். தொடர்ந்து, கூட்டம் குறித்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, வேளாண் சட்டங்கள் எதிர்காலத்தில் வேறு வடிவத்தில் கொண்டு வரப்படலாம் என்ற அச்சம் உள்ளதாக குறிப்பிட்டார். கொரோனா நிவாரணம், விவசாயிகளுக்கு நிவாரணம், பணவீக்கம், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்தார்.  

 


Next Story

மேலும் செய்திகள்