தென் ஆப்பரிக்காவில் புதிய கொரோனா வைரஸ் - தென் ஆப்பரிக்க விமானங்களுக்கு பிரிட்டன் தடை

தென் ஆப்பரிக்காவில் ஒரு புதிய ரக, உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளதால், அங்கிருந்து வரும் விமானங்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.
தென் ஆப்பரிக்காவில் புதிய கொரோனா வைரஸ் - தென் ஆப்பரிக்க விமானங்களுக்கு பிரிட்டன் தடை
x
தென் ஆப்பரிக்காவில் ஒரு புதிய ரக, உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளதால், அங்கிருந்து வரும் விமானங்களுக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது. தென் ஆப்பரிக்காவில் பி.1.1529 என்ற புதிய ரக, உருமாறிய கொரொனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக, நேற்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ஏராளமான
உருமாற்றங்கள் கொண்ட, வீரியம் மிகுந்த இந்த புதிய ரக வைரஸ், வேகமாக பரவும் தன்மை மற்றும் தடுப்பூசிகளை எதிர்க்கும் தன்மை கொண்டதாக உள்ளது. தென் ஆப்பரிக்காவில் 22 பேருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் அண்டை நாடுகளுக்கும் இது பரவியுள்ளது. இதன் தாக்கம் பற்றி உலக சுகாதார நிறுவனம் ஒரு அவசர கூட்டத்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து தென் ஆப்பரிக்கா, போட்ஸ்வானா, ஸிம்பாவே, மொஸாம்பிக், நமிபியா, லெசோதோ மற்றும் எஸ்வட்னி ஆகிய நாடுகளில் இருந்து பிரிட்டன் செல்லும் விமானங்களுக்கு, பிரிட்டன் தடை விதித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்