முதல் டோஸ் - 70%க்கும் குறைவு : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை

டெல்லியில் 70 சதவீதத்திற்கு குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள 4 மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
முதல் டோஸ் - 70%க்கும் குறைவு : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நடவடிக்கை
x
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் எண்ணிக்கை 116 கோடியை கடந்துள்ள நிலையில், மொத்த புள்ளிவிவரங்கள் படி, 18வயதுக்கு மேற்பட்டோரில் சுமார் 81 புள்ளி 5 சதவீதம் பேர் முதல் டோஸ் செலுத்தி கொண்டு உள்ளனர். அதுபோல, கிட்டத்தட்ட 43சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் செலுத்தி கொண்டு உள்ளனர். இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் நூறு சதவீதம் பேர் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளனர். ஆனால்  மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து மற்றும் புதுச்சேரி ஆகிய 4  மாநிலங்களில் முதல் டோஸ் தடுப்பு ஊசியை செலுத்தியவர்கள் 70 சதவீதத்திற்கும் கீழ் உள்ளனர். அதன்படி, புதுச்சேரியில் 66 சதவீதம் பேரும், மேகாலயாவில் 57 சதவீதம் பேரும், மணிப்பூரில் 54 சதவீதம் பேரும், நாகாலாந்தில் 49 சதவீதம் பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மேற்கண்ட மாநிலங்களில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 40 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட 4  மாநில சுகாதாரதுறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியா காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு ஆலோசனைகளையும், தீவிர தடுப்பூசி பிரச்சாரத்தை முன்னெடுக்கவும் கேட்டு கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்