போதைப்பொருள் வழக்கு - ஆர்யன் கானுக்கு ஜாமின்
பதிவு : அக்டோபர் 28, 2021, 06:54 PM
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சொகுசு கப்பலில் போதை விருந்தில் ஈடுபட்டதாக ஆர்யன் கான் உள்ளிட்ட சிலரை, கடந்த 3ஆம் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு ஆர்யன் கான் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள ஆர்யன் கான், ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரது ஜாமின் மனுவை மாஜிஸ்திரேட்டு நீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றமும் நிராகரித்தது. இந்நிலையில், அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணயில், ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கி, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிற செய்திகள்

முதலீட்டு செயலி மூலம் பல கோடி ரூபாய் மோசடி - கும்பலின் தலைவனுக்கு 2 நாள் சி.பி.சி.ஐ.டி காவல்

ஆன்லைன் முதலீட்டு செயலி மூலம் லட்ச கணக்கில் மோசடி செய்த, கும்பல் தலைவனுக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவு.

8 views

"2020-ல் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு"

கடந்த 2020ம் ஆண்டில், நாடு முழுவதும் 50 ஆயிரத்து 35 சைபர் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மக்களவையில், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

9 views

ஒமிக்ரானை கண்டறிவது எப்படி?

"ஒமிக்ரான்" வகை கொரோனாவை, ஆர்.டி.பி.சி.ஆர் மற்றும் ரேட் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும் என்று, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.

10 views

3 ஆண்டுகளில் இத்தனை விவசாயிகள் தற்கொலையா..? அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த 3 ஆண்டுகளில் 17,299 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

8 views

"ஒமிக்ரானை எதிர்கொள்ள தயார்" - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

இந்தியாவில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்படவில்லை என்றும் புதிய உருமாறிய கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

13 views

திவாலாகும் அனில் அம்பானியின் நிறுவனம்

திவால் நிலையில் உள்ள நிதி நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.