உத்தரகாண்டில் கொட்டித் தீர்க்கும் கனமழை - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்டுள்ள பேரிடர்களில் சிக்கி 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகாண்டில் கொட்டித் தீர்க்கும் கனமழை - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு
x
உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 17-ஆம் தேதி முதல் கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர். நைனிடல், பௌரி கர்வால், சாம்பவாட் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், அம்மாநிலத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேரிடரில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மழை பாதிப்புகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஹால்ட்வானியில் உள்ள கவுலா ஆற்றின் பாலம் மழை வெள்ளத்தில் பிளவு பட்டது. அப்போது பாலத்தில் வாகனம் வந்துகொண்டிருந்த நிலையில், அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு எச்சரித்ததையடுத்து விபத்து தவிர்க்கப்பட்டது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கத்கோடம் ரயில்வே தண்டவாளம் இரண்டாக துண்டிக்கப்பட்டது. கவுலா ஆற்றில் மழைவெள்ளம் ஆர்ப்பரித்த நிலையில், ஆற்றின் நடுவே யானை ஒன்று சிக்கியது. பின்னர் வனத்துறையினரின் உதவியோடு அந்த யானை காட்டுக்குள் சென்றது.

இந்நிலையில், உத்தரகாண்ட் மழை பாதிப்புகள் குறித்து அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்