சர்ச்சை சாமியார் குர்மீத்துக்கு ஆயுள் தண்டனை - மேலாளரை கொலை செய்த வழக்கில் தீர்ப்பு

சர்ச்சை சாமியாரான குர்மீத் ராம் ரஹீம் சிங் உட்பட 5 பேருக்கு கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்தது என்ன? இப்போது பார்க்கலாம்
சர்ச்சை சாமியார் குர்மீத்துக்கு ஆயுள் தண்டனை - மேலாளரை கொலை செய்த வழக்கில் தீர்ப்பு
x
தி மெசஞ்சர் ஆஃப் காட் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பல சர்ச்சைகளுக்கு வித்திட்டவர் தான் இந்த குர்மீத் ராம் ரஹிம் சிங்.

ஹரியானா மாநிலம் சிர்சாவில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவராக உள்ளவர் தான் இந்த குர்மீத்… மடத்தின் சாமியாராக இருந்தாலும் ஆடை, ஆபரணம் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். 

சினிமா மீது ஆர்வம் அதிகம் கொண்ட இவர், பாடல்கள் பாடுவதும், இசையமைத்து அதை ஆல்பமாக வெளியிடுவதிலும் அதீத ஆர்வம் காட்டி வந்தார்… 


இப்படியாக கடவுளின் தூதர் என்றழைக்கப்படும் தி மெசஞ்சர் ஆஃப் காட் என்ற திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்கி அதில் நடித்தார். இந்த படங்களுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தும் இருந்தனர்.

தன்னுடைய ஆசிரமத்திற்கு வரும் பெண்களை பாலியல் வன்முறை செய்தார் என்ற குற்றச்சாட்டு குர்மீத் மீது தொடர்ச்சியாக எழுந்து வந்தது. இதில் பெண் துறவிகள் 2 பேரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குர்மீத்துக்கு சிறைத் தண்டனையும் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்தது. 

இதேபோல் குர்மீத் செய்யும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் சத்ரபதி என்பவரும் 2002ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கிலும் குர்மீத்துக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் தான் ஆசிரமத்தின் மேலாளராக இருந்த ரஞ்சித் சிங் என்பவர் மீதும் குர்மீத்துக்கு சந்தேகம் எழுந்தது. ஆசிரமத்தின் நிர்வாகம் அத்தனையையும் கவனித்து வந்த ரஞ்சித் சிங் தன்னை பற்றிய அவதூறுகளை வெளியிட்டதாக நம்பினார் குர்மீத். இதையடுத்து 2002ல் சுட்டுக்கொல்லப்பட்டார் ரஞ்சித் சிங். அவரை கொலை செய்த வழக்கில் குர்மீத் சிங் உட்பட 5 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். பின்னர் இந்த வழக்கும் சிபிஐக்கு மாற்றப்பட்டது. 
இந்த வழக்கு பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குர்மீர் ராம் ரஹீம், கிருஷ்ணலால், ஜஸ்பீர் சிங், சப்தில் சிங், இந்திரசேனா என 5 பேரை குற்றவாளிகள் என உறுதி செய்தது நீதிமன்றம்..

இதையடுத்து அவர்கள் 5 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் குர்மீத்துக்கு 31 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்