கனமழையால் 11 அணைகளுக்கு ரெட் அலர்ட் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கேரளாவில் கொட்டித்தீர்த்த கனமழையால் 11அணைகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் ஒவ்வொரு அணையாக திறக்கப்பட்டு வருகின்றன.
கனமழையால் 11 அணைகளுக்கு ரெட் அலர்ட் - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
நீர்வரத்து அதிகரிப்பால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பா அணையின் இரண்டு ஷட்டர்கள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளது. இதனால் பம்பா ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதேபோன்று இடமலையார் அணையும் திறக்கப்பட்ட்டது. இதனால் குட்டம்புழா, காவலங்காடு, கீராம்பாறை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. கொத்தமங்கலம், ஆலுவா பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே இடுக்கி அணையும் திறக்கப்பட உள்ளதையொட்டி ஆற்றில் குளிக்கவோ, மீன்பிடிக்க செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்