கண்ணீரில் கடவுளின் தேசம்: கேரளாவை புரட்டி போட்ட கனமழை
பதிவு : அக்டோபர் 18, 2021, 02:33 PM
விடாது கொட்டி தீர்த்து வரும் கனமழையில் தத்தளித்து கொண்டிருக்கிறது, கேரளா... பாதிப்புகளை படம் பிடித்து காட்டுகிறது, இந்த தொகுப்பு...
கொரோனாவை கட்டுப்படுத்த போராடி கொண்டிருக்கும் வேளையில், கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என அடுத்தடுத்த பாதிப்புகள் கேரளாவின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களை புரட்டி போட்டுள்ளன.... 

இயற்கை சீற்றத்தால் கேரளாவில் நிலைமை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது... கனமழையில் வாகனங்கள் மட்டுமின்றி, மக்களும் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன... 

கடலோர பகுதிகளையும், மலை பகுதிகளையும் அதிகம் கொண்ட மாநிலம் என்பதால் மழையின் தீவிரம் குறைந்தபாடில்லை... 

கேரளாவில் முண்டகாயம் பகுதியில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், கரையோரம் இருந்த முழு வீடு அப்படியே சரிந்து விழும் காட்சி வெளியாகி காண்போரை அதிர வைத்துள்ளது... 

மூணாறு பகுதியில் சாலையில் தேங்கி நின்ற மழை நீரில் அரசு பேருந்து சிக்கி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

பம்பா நதியில் வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், 
ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழுந்தும்... வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தும்.... மக்களின் இயல்பு வாழ்க்கை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. 

மலைப்பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளை அதிகம் கொண்ட இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பல அப்பாவி உயிர்கள் பறிபோகின... 

கோட்டயம் மாவட்டத்தில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், மழையால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் உள்ள சாலைகள் துண்டிக்கப்பட்டன. 

திருவனந்தபுரத்தில் வீடு இடிந்து விழுந்ததில், இடிப்பாடுகளுக்குள் சிக்கி கொண்ட 22 நாளே ஆன கைக்குழந்தை உட்பட ஆறு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

ஆலப்புழா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

183 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

71 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

61 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

36 views

பிற செய்திகள்

"கராத்தே வீரர்களுக்கு இடஒதுக்கீட்டில் வேலை" - கராத்தே நடுவர் காளீசன் இளஞ்செழியன் பேட்டி

கராத்தே வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உலக கராத்தே சம்மேளன நடுவர் காளீசன் இளஞ்செழியன் வலியுறுத்தியுள்ளார்.

0 views

வேளாண் சட்டங்கள் ரத்து மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதற்கான மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்

0 views

செல்போன் பறிப்பு - மூவர் கைது

மதுரவாயல் அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

3 views

"அம்மா உணவகத்தை மூடும் முயற்சியில் திமுக அரசு"

அம்மா உணவகத்தை முடக்க, திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

9 views

வசீம் அக்ரம் கொலை வழக்கு - 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது

வாணியம்பாடி அருகே வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

8 views

இளைஞர்களை கட்டிப்போட்டு தாக்குதல் - வீடியோ

ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே கல்லூரி மாணவர்களை கட்டிப்போட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.