"பால் உற்பத்தியை அதிகரிக்கும் சாக்லேட்" - மத்தியப்பிரதேச பல்கலை. கண்டுபிடிப்பு

கால்நடைகளின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் சாக்லேட் வடிவிலான தீவனத்தை மத்தியபிரதேச பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
பால் உற்பத்தியை அதிகரிக்கும் சாக்லேட் - மத்தியப்பிரதேச பல்கலை. கண்டுபிடிப்பு
x
ஆடு, மாடுகளின் பால் உற்பத்தியை பெருக்குவது குறித்து மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மேற்கொண்டது.

2 ஆண்டுகால ஆராச்சிக்கு பின் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சாக்லேட்டுகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 

இந்த சாக்லேட்டை கால்நடைகளுக்கு கொடுப்பது மூலம் பால் உற்பத்தி மற்றும் கருத்தரிப்பு விகிதம் ஆகியவை அதிகரிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

பசுந்தீவனங்கள் கிடைக்காத சூழலில், மாற்று தீவனமாக இந்த சாக்லேட்களை பயன்படுத்தலாம் என பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

மாநில அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்த உடன் விவசாயிகளுக்கு இந்த சாக்லேட்டுகள் வினியோகம் செய்யப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்