தசரா பண்டிகை பேரணியில் புகுந்த கார்: ஒருவர் உயிரிழப்பு - 20 பேர் காயம்

சத்தீஸ்கரின் ஜஷ்பூர் நகரில் வேகமாக வந்த கார் மோதியதில் தசரா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
தசரா பண்டிகை பேரணியில் புகுந்த கார்: ஒருவர் உயிரிழப்பு - 20 பேர் காயம்
x
சத்தீஸ்கரின் ஜஷ்பூர் நகரில் வேகமாக வந்த கார் மோதியதில்  தசரா கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர். ராய்காட் சாலையில் தசரா பண்டிகையை ஒட்டி பேரணியாக சென்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள்,  சென்ற கார் மோதியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் சிகிச்சைக்காக பதல்கான் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காரில் அதிக அளவு கஞ்சா ஏற்றி, தப்பி ஓடியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. காரை வேகமாக ஓட்டிச் சென்ற நபரை பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்தனர். 

தசரா பேரணியில் கார் புகுந்த விவகாரம் - உயிரிழந்தவருக்கு இரங்கல் தெரிவித்த சட்டீஸ்கர் முதல்வர்

இதனிடையே, தசரா பேரணியில், கார் புகுந்த விவகாரத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பப்லு விஸ்வகர்மா மற்றும் சிஷ்உபால் சாகு, ஆகிய இருவரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என ஜஷ்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, உயிரிழந்த நபருக்கு, சட்டீஸ்கர் மாநில முதல்வர் பாகேல், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், சம்பவம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 





Next Story

மேலும் செய்திகள்