ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வின் முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.
x
கடந்த அக்டோபர் 3ம் தேதி ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு  நடைபெற்ற நிலையில், மொத்தம் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 699 பேர் தேர்வெழுதினர். இத்தேர்வின் முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதில், 6 ஆயிரத்து 452 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பொது தரவரிசை பட்டியலில் டெல்லியை சேர்ந்த மிருதுல் அகர்வால் என்பவர், 360க்கு 348 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். பெண்கள் பிரிவைப் பொறுத்தவரை, ஐஐடி டெல்லி மண்டலத்தைச் சேர்ந்த காவ்யா சோப்ரா, 286 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்