கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராக இருந்து மோசடி - மோசடி செய்தவரை கைது செய்த போலீஸ்
பதிவு : அக்டோபர் 14, 2021, 09:27 AM
கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராக இருந்து மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த விக்னேஷ் என்பவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.  ஆன்லைன் சூதாட்டத்திற்காக பணத்தை கட்டியதாகவும், சுமார் 87 லட்சம் ரூபாய் பணத்தை அதில் இழந்து ஏமாந்துவிட்டதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆன்லைனில் கேசினோ, லைவ் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் இணையதளங்கள் செயல்பட்டு வந்தது, விசாரணையில் தெரியவந்தது. 

இணையதளத்தில் விளையாடுவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் கட்ட வைத்த பின்பு பெட்டிங்காக மாற்றி தொடர்ந்து விளையாட செய்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக்குவதும் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனடிப்படையில் பணபரிவர்த்தனை நடந்த வங்கி கணக்கை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது வங்கி கணக்குக்கு சொந்தமான நபர் மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டலில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அதிரடியாக அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.  பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கீழ்பாக்கத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. தனது தந்தையின் மறைவிற்கு பிறகு ஆன்லைன் சூதாட்ட தொழிலையே பிரதானமாக கொண்டு அவர் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆன்லைன் சூதாட்டம் மட்டுமின்றி கிரிக்கெட் விளையாட்டு, மேட்ச் பெட்டிங்கிலும் அவர் புக்கியாக செயல்பட்டு 25 முதல் 30 நபர்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. 

மேலும் கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணனிடமிருந்து 193 கிராம் தங்க நகைகள், சுமார் 25 லட்சம் ரூபாய் பணம், 6 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்கள், 10 செல்போன்கள், லேப்டாப், சொகுசு கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 

தொடர்புடைய செய்திகள்

அருண்விஜய் நடிக்கும் 'பார்டர்' - நவம்பர் 19ல் திரையரங்கில் 'பார்டர்' வெளியீடு

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பார்டர் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

396 views

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவாலயத்தை திறக்க தடை - ஆட்சியர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்தூரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்தவ தேவாலயத்தை திறக்க தடை விதித்து உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

98 views

ருத்ர தாண்டவம் படத்துக்கு தடை கோரிய வழக்கு- பட தயாரிப்பு நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு

ருத்ர தாண்டவம் படத்திற்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதில் அளிக்க , பட தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

67 views

பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா இறப்புகள்: இறந்தவர்களின் நினைவாக காகித காற்றாடிகள்

பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் நினைவாக காகித காற்றாடிகள் செய்யப்பட்டு சுவரில் ஒட்டப்பட்டன.

53 views

மரங்களை இடம் மாற்ற கொண்டு வரப்பட்ட யானை: திடீரென்று ஆக்ரோஷமடைந்து ஓடியதால் பரபரப்பு

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள வலியபுரம் என்ற இடத்தில் வெட்டப்பட்ட மரங்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும்போது, யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

7 views

பிற செய்திகள்

ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் - சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளில், சந்திர பிரபை வாகனத்தில், மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

7 views

மரங்களை இடம் மாற்ற கொண்டு வரப்பட்ட யானை: திடீரென்று ஆக்ரோஷமடைந்து ஓடியதால் பரபரப்பு

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள வலியபுரம் என்ற இடத்தில் வெட்டப்பட்ட மரங்களை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும்போது, யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

7 views

யார் இந்த சபேசன்?- திடுக்கிடும் பின்னணி தகவல்கள்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த கபிலனுக்கு தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த சபேசன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

8 views

"விரைவில் செயலாளர்கள் குழு ஏற்படுத்தப்படும்" - சென்னை துறைமுக தலைவர் தகவல்

மத்திய அரசின் கதி சக்தி திட்டத்தின் மூலம் ரயில்வே, துறைமுகம், நீர் வழி போக்குவரத்து, சாலை போக்குவரத்து உட்பட 16 துறைகள் ஒருங்கிணைந்து செயல்படும் என்று துறைமுகத் தலைவர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.

22 views

குடியரசு தலைவர் காஷ்மீர், லடாக் பயணம்: இன்று லடாக் செல்கிறார் குடியரசு தலைவர்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.

9 views

பூக்கள் விலையேற்றம்... பொதுமக்கள் அதிர்ச்சி - திடீர் விலையேற்றத்துக்கு காரணம் என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில், இன்று மூன்று மடங்கு வரை அதிக விலையில் பூக்கள் விற்பனையாகின. இதற்கான காரணம் என்ன?

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.