விவசாயிகள் உயிரிழந்த லக்கிம்பூரில் 144 உத்தரவு - குர்னாம்சிங் விடுவிப்பு- போராட்டம் கைவிடல்

விவசாயிகள் உயிரிழந்த லக்கிம்பூரில் 144 உத்தரவு - குர்னாம்சிங் விடுவிப்பு- போராட்டம் கைவிடல்
விவசாயிகள் உயிரிழந்த லக்கிம்பூரில் 144 உத்தரவு - குர்னாம்சிங் விடுவிப்பு- போராட்டம் கைவிடல்
x
விவசாயிகள் உயிரிழந்த லக்கிம்பூரில் 144 உத்தரவு - குர்னாம்சிங் விடுவிப்பு- போராட்டம் கைவிடல் 

உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூர் செல்ல முயன்ற அரியானா விவசாயிகள் சங்கத் தலைவர் குர்னாம்சிங் சதுனி கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில், விவசாயிகள் மரணமடைந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு செல்ல முயன்ற அரியானா விவசாயிகள் சங்கத் தலைவர் குர்னாம்சிங் சதுனி கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து, அரியானா மாநிலம் அம்பாலா அருகே, டெல்லி-அமிர்தசரஸ் சாலையில் உள்ள சம்பு சுங்கச் சாவடியில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே, விவசாயிகள் சங்கத் தலைவர் குர்னாம்சிங் சதுனியை விடுவித்த போலீசார், 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், லக்கீம்பூர் செல்ல இருந்த சதுனியை கைது செய்ததாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்