"சாதி, மதம், சமூக பாகுபாடுகளை களைய வேண்டும்" - குடியரசு துணை தலைவர் பேச்சு

சாதி, மதம், மொழி மற்றும் பாலினம் அடிப்படையிலான அனைத்து சமூக பாகுபாடுகளையும் களைய வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.
சாதி, மதம், சமூக பாகுபாடுகளை களைய வேண்டும் - குடியரசு துணை தலைவர் பேச்சு
x
பாரதியின் 100-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் குடியரசு துணைத்தலைவர்  வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது இந்திய கலாச்சாரம் எப்போதும் பெண்களை தெய்வீகத்தின் உருவமாக மதிக்கிறது என்று கூறினார். இந்தியாவின் மிகச்சிறந்த இலக்கிய மேதைகளில் ஒருவரான பாரதியார், கவிஞர், பத்திரிகையாளர், விடுதலை போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டவராக திகழ்ந்துள்ளதாக கூறினார். ஏழைகள் மற்றும் பின்தங்கியோரை ஆழ்ந்து நேசித்ததாகவும் அவர் தெரிவித்தார். பாரதியின் உணர்ச்சிமிகு கவிதைகள் மற்றும் எழுத்துகள் தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் மக்களிடையே தேசிய உணர்வை ஊட்டுவதில் முக்கிய பங்காற்றியதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்