"தெலுங்கானாவில் ரூ.750 கோடி முதலீடு; 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு" - மலபார் குழுமம் அறிவிப்பு

மலபார் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் நிறுவனம் தெலங்கானாவில் 750 கோடி ரூபாய் முதலீட்டில் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய தங்கம் மற்றும் வைர நகை உற்பத்தி பிரிவை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில் ரூ.750 கோடி முதலீடு; 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு - மலபார் குழுமம் அறிவிப்பு
x
மலபார் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் நிறுவனம் தெலங்கானாவில் 750 கோடி ரூபாய் முதலீட்டில் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய தங்கம் மற்றும் வைர நகை உற்பத்தி பிரிவை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் 2 ஆயிரத்து 500 பேர் வேலை வாய்ப்பை பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் நிலவும் முதலீட்டுக்கு உகந்த சூழல் மற்றும் சாதகமான அரசின் கொள்கை ஆகியவையே  அங்கு முதலீடு செய்ய தூண்டியது என்று மலபார் குழுமம் தெரிவித்துள்ளது. கேரளாவை சேர்ந்த மலபார் நிறுவனம் 10 நாடுகளில் 260 கிளைகளையும் 13 நகை தயாரிப்பு உற்பத்தி கூடங்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்