நாளை 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்பு

45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் லக்னோவில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நாளை கூடுகிறது.
நாளை 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்பு
x
கடந்த 20 மாதங்களில் முதல்முறையாக மாநில நிதி அமைச்சர்கள் நேரடியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். கடைசியாக 2019ம் ஆண்டு, டிசம்பர் 18ம் தேதி நேரடியாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடியது. அதன்பின் இப்போது தான் கூட உள்ளது. நாளை நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்  அத்தியாவசியமான பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ள நிலையில்,  பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரும் கோரிக்கை வலுப்பெறத் தொடங்கி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்