ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த திட்டம் - "ரூ.26 ஆயிரம் கோடிக்கு ஊக்கத்தொகை"

ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி துறைக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த திட்டம் - ரூ.26 ஆயிரம் கோடிக்கு ஊக்கத்தொகை
x
டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விவரங்களை மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர் மற்றும் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். ஆட்டோமொபைல் மற்றும் ட்ரோன் தொழிற்துறைக்கு 26 ஆயிரத்து 58 கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அதில் ஆட்டோமொபைல் துறைக்கு 25 ஆயிரத்து 929 கோடி ரூபாயும் ட்ரோன் தொழிற்துறைக்கு120 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஆட்டோமொபைல் உற்பத்தி துறையில் கூடுதலாக 7 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்