தொலைதொடர்பு துறையில் சீர்திருத்தம்: "100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி" - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தொலை தொடர்பு துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான உச்சரவரம்பு 49 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொலைதொடர்பு துறையில் சீர்திருத்தம்: 100% அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
x
கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பல்வேறு சீர்திருத்த முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தொலைத்தொடர்பு துறையில் தானியங்கி வழியாக மேற்கொள்ளப்படும் நேரடி அன்னிய முதலீட்டை 40 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக ஆக அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக மத்திய தெரிவித்துள்ளார். மேலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தவேண்டிய அலைக்கற்றைக்கான நிலுவை தொகையை செலுத்த நான்கு ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கியும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். நான்காண்டு கால அவகாச வாய்ப்பை எடுத்துக்கொள்ளும் நிறுவனங்கள் மேற்கண்ட ஆண்டுகளுக்கு 2% வட்டி தொகையை செலுத்த வேண்டும் என்றும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அலைக்கற்றைகளை வைத்திருப்பதற்கான கால அவகாசம் 20 ஆண்டுகளில் இருந்து 30 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும் எனவும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 1999ல் கொண்டு வரப்பட்ட தொலைத்தொடர்பு விதிகளின்படி ஒவ்வொரு தொலைதொடர்பு நிறுவனங்களும் AGR எனப்படும் சரி செய்யப்பட்ட மொத்த வருவாயில், ஒரு குறிப்பிட்ட தொகையை, ஆண்டு லைசென்ஸ் கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும் எனவும், இதில் தொலைத்தொடர்பு அல்லாத வருவாயை சரி செய்யப்பட்ட மொத்த வருவாய்கான தொகையில் கணக்கில் கொள்ளப்படாது என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்