விமானங்களில் அவசர கால அறிவிப்பு - மாநில மொழிகளில் வழங்கக் கோரி மனு

விமானங்களில் அவசரகால அறிவிப்பை மாநில மொழிகளில் வழங்குவது குறித்து பரிசீலிக்க விமான போக்குவரத்து துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
விமானங்களில் அவசர கால அறிவிப்பு - மாநில மொழிகளில் வழங்கக் கோரி மனு
x
அவசர காலங்களில் எப்படி செயல்பட வேண்டும்?, அவசர வழி, ஆக்சிஜன் முகக்கவசம் பயன்படுத்தும் முறை உள்ளிட்டவை குறித்து விமானங்களில் பயணிகளுக்கு அறிவிப்பு செய்யப்படுகிறது.ஆனால், இந்த அவசரகால அறிவிப்புகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வழங்கப்படுகின்றன. எனவே அவசர கால அறிவிப்புகளை மாநில மொழிகளிலும் வழங்க உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரரின் யோசனையை பரீசிலித்து 8 வாரங்களில் முடிவெடுக்க விமான போக்குவரத்து துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.விமான புறப்படும், மற்றும் சென்று சேரும் மாநிலத்தின் மொழிகளில் அவசர அறிவிப்பை வெளியிட்டால்
எளிதாக புரிந்துகொள்ள  முடியும் என்பது பயணிகளின் நீண்டகால எதிர்பார்ப்பாக உள்ளது.ஓராண்டுக்கு முன்பு, சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில் பிரியாவிக்னேஷ் என்கிற விமானி தமிழில் அறிவிப்பு செய்தது பயணிகளிடையே, பெரும் வரவேற்பை பெற்றது
குறிப்பிடத்தக்கது. சமூகவலைதளங்களிலும் அவரது பேச்சு வைரலானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்