"யாருக்கும் நிபா வைரஸ் தொற்று இல்லை" - கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

நிபா வைரஸால் உயிரிழந்த சிறுவனின் வீடு அமைந்துள்ள மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் 68 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் நிபா தொடர்பான அறிகுறி இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
யாருக்கும் நிபா வைரஸ் தொற்று இல்லை - கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி
x
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிபா வைரசால், உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்போது பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருவதாக கூறினார். நிபா பாதிப்புஏற்பட்ட பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட வௌவால்கள் சாப்பிட்ட பழம்,  வவ்வாலின் எச்சம்,  எச்சில் போன்றவை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார். உயிரிழந்த சிறுவனின் வீடு, அமைந்துள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 15 ஆயிரம் வீடுகளில் குடியிருக்கும் 68,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர்களில் யாருக்கும் நிபா தொடர்பான அறிகுறி தென்படவில்லை என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர்கள், ஊழியர்கள், வாகன ஓட்டுனர்கள், மாணவர்களின் பெற்றோர் போன்றோர் கட்டாயமாக இரண்டு டோஸ் தடுப்பு மருந்து செலுத்தி இருக்க வேண்டும் எனவும் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்