பெங்களூரு சிறை முறைகேடு - அறிக்கை சமர்ப்பிக்க கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அறிக்கை சமர்ப்பிக்க கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு சிறை முறைகேடு - அறிக்கை சமர்ப்பிக்க கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
x
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அறிக்கை சமர்ப்பிக்க கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2017-ல் சசிகலா சிறையில் இருந்தபோது, பரப்பன அக்ரஹார சிறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், இதற்காக லஞ்ச பணம் கை மாறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது தொடர்பாக கர்நாடக லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், சமூக ஆர்வலர் ஒருவர் விசாரணை சரியாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு மீதான விசாரணையில், நீதிமன்றம் பலமுறை கர்நாடக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.  

விசாரணை அறிக்கைகள் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 
 
இதற்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அப்போதைய சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயண ராவ் மற்றும் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். ‌இந்நிலையில், 30 நாட்களுக்குள் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது, அரசு நடவடிக்கை எடுத்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், தவறினால், கர்நாடக தலைமைச்செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்