2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துதல் - அடுத்த கட்ட ஆய்விற்கு அனுமதி

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்தி ஆய்வு மேற்கொள்ள இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துதல் - அடுத்த கட்ட ஆய்விற்கு அனுமதி
x
கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி ஆகிய 3 தடுப்பூசிகள் தற்போது மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.


ஒவ்வொருவருக்கும் ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 2 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.


இந்நிலையில் 2 டோஸ்களுக்கும், 2 வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை மாற்றி மாற்றி அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 


இவ்வாறு மாற்றி மாற்றி அளிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்திக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கொரோனா பணிக் குழு ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது.


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலானது, 18 நபர்கள் மீது நடத்திய ஆய்வின் முடிவில், கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளைக் கலப்பதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும், எதிர்ப்புசக்தி அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் 2 தடுப்பூசிகளையும் கலந்து செலுத்தி, அடுத்த கட்ட ஆய்வை மேற்கொள்ள இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் தற்போது அனுமதி அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்