தடுப்பூசி திறனை அதிகரிக்க முடிவு - மக்களவையில் மத்திய அரசு தகவல்

மாதாந்திர தடுப்பூசி உற்பத்தி திறனை அதிரிக்க தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தடுப்பூசி திறனை அதிகரிக்க முடிவு - மக்களவையில் மத்திய அரசு தகவல்
x
தடுப்பூசி உற்பத்தி குறித்து மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் பதிலளித்தார். கோவிஷீல்டு தடுப்பு மருந்தானது11 கோடியில் இருந்து 12 கோடிக்கு அதிகமான எண்ணிக்கையிலும், கோவாக்சின் இரண்டரை கோடியில் இருந்து ஐந்து கோடியே 80 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் உற்பத்தி செய்ய  முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். ஜனவரி 16ம் தேதி தடுப்பூசி திட்டம் தொடங்கியதில் இருந்து தற்பொழுது வரை சீரம் நிறுவனத்தால் 44 கோடியே 42 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், பாரத் பயோ-டெக் நிறுவனத்தின் மூலம் 6 கோடியே 82 லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகளும் விநியோகிக்கப் பட்டுள்ளதாக தமது பதிலில் மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்