"நீட் தேர்வு ரத்து செய்யப்படாது" - மத்திய அரசு

நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என மக்களவையில் மத்திய இணையமைச்சர் பாரதி ப்ரவின் பவார் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு ரத்து செய்யப்படாது - மத்திய அரசு
x
நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என மக்களவையில் மத்திய இணையமைச்சர் பாரதி ப்ரவின் பவார் தெரிவித்துள்ளார். 

கொரோனா பெருந்தொற்று, குறிப்பாக அதன் மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் மற்றும் அது போன்ற நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யும் திட்டம் உள்ளதா என, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள, மத்திய இணையமைச்சர் பாரதி ப்ரவின் பவார் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என்றும், தேர்வு எழுதுவோர் கூட்டம் கூடுவதையும், தொலைதூரப் பயணத்தையும் தவிர்ப்பதற்காக நாடு முழுவதும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.    
தேர்வு எழுதுவோருக்கு வழங்கப்படும் அட்மிஷன் கார்டுகள் சுலபமாக நடமாடும் இ-பாஸ் அனுமதியை கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார். 
தேர்வு மையங்களுக்குள் நுழைவது வெளியேறுவது ஆகியவை நெரிசல் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்படும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்.  சாதாரண வெப்பநிலைக்கு மேல் கண்டறியப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வகத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என கூறியுள்ளார். 
முகக் கவசம், ஷீல்டு மற்றும் சானிடைசர் ஆகியவற்றை உள்ளடக்கிய  பாதுகாப்பு கிட் வழங்கப்படும் என்றும் மத்திய இணையமைச்சர் பாரதி ப்ரவின் பவார் தெரிவித்துள்ளார். 
கலை மற்றும் அறிவியலுக்கான தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் மாநில அரசுகளே நடத்துகின்றன என எழுத்துப்பூர்வ பதிலில் மத்திய இணையமைச்சர் பாரதி ப்ரவின் பவார் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்