6 மாத குழந்தைக்கு அரிய வகை நோய் பாதிப்பு - சிகிச்சை பலனின்றி குழந்தை பலியான சோகம்

கேரளாவில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துக்காக காத்திருந்த நிலையில், அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
6 மாத குழந்தைக்கு அரிய வகை நோய் பாதிப்பு - சிகிச்சை பலனின்றி குழந்தை பலியான சோகம்
x
கேரளாவில் 18 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துக்காக காத்திருந்த நிலையில், அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கேரள மாநிலம், கண்ணூர் பகுதியைச் சேர்ந்த ஆரிப்- ரமீஸா தம்பதியரின் 6 மாத குழந்தைக்கு ஸ்பைனல் மஸ்குலார் அட்ராபி என்ற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. குழந்தை பிறந்து 17 ஆவது நாளில் பாதிப்பு கண்டறியப்பட்டு, கோழிக்கோடு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நோய்க்கு 18 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தைக்கான மருத்துவ சிகிச்சையை கேரள அரசு ஏற்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் குழந்தையின் தந்தை ஆரிப் வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்றம் உத்தரவின்படி கேரள அரசு சார்பில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு, சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. குழந்தையின் சிகிச்சைக்காக உலகம் முழுவதில் இருந்து 16.5 கோடி ரூபாய் வரையில் நிதியும் வசூலானது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்