"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
3 வது அலை வந்தால் சமாளிக்க தயார் - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு
x
இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

கொரோனா சூழல் குறித்த விவாதத்திற்கு பதில் அளித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 3 வது அலை வராமல் இருக்கவும், வந்தால் அதிலிருந்து மக்களை காப்பாற்றவும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளதாக கூறினார்.

கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். 

கொரோனா விவகாரத்தில் சிலர் அரசியல் செய்து வருவதாகவும் மன்சுக் மாண்டவியா குற்றஞ்சாட்டினார். 

பல மாநிலங்கள் தடுப்பூசி இறக்குமதி செய்ய உலக அளவில் டெண்டர் விடுத்ததாகவும் ஆனால்  தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய டெண்டர் எடுக்க முன் வரவில்லை என குறிப்பிட்டார். 

செங்கல்பட்டு தடுப்பு ஊசி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு நடத்தி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

பல மாநில அரசுகள் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை தங்கள் கையிருப்பில் தடுப்பூசிகளை வைத்துள்ளதாகவும் (gfx in 7 ) அதற்கான தரவுகள் தங்களிடம் உள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். 

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி மீதான பரிசோதனை வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக  அவர் கூறினார். 

கொரோனா பலி எண்ணிக்கை மற்றும் தொற்று தொடர்பாக மாநிலங்கள் வழங்கும் தகவலை தொகுத்து வெளியிடும் பணியை மத்திய சுகாதாரத் துறை செய்து வருவதாக அவர் தெரிவித்தார். 

பலி எண்ணிக்கையோ தொற்றையோ குறைத்து காட்டும்படி யாரிடமும் கூறவில்லை என, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்