"வாகன பதிவில் புதிய விதிமுறைகள்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

"வாகன பதிவில் புதிய விதிமுறைகள்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
வாகன பதிவில் புதிய விதிமுறைகள் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
x
"வாகன பதிவில் புதிய விதிமுறைகள்" - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

பழங்கால வாகனங்களை பாதுகாப்பதற்காக அதன் பதிவு நடவடிக்கை முறைப்படுத்தப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.ஏற்கனவே பழங்கால வாகனங்களை பதிவு செய்திருந்தால், அந்த எண்களை தக்க வைத்துக்கொள்ளும் சிறப்பு அம்சங்கள் புதிய விதிமுறையில் இருப்பதாக  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.பழைய வாகனங்களின் புதிய பதிவுக்கு "VA" என்ற தனித்துவமான பதிவு குறியீடு கொண்ட எண்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்கால வாகனங்களை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் பதிவு நடவடிக்கையை முறைப்படுத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வின்டேஜ் வாகனங்களை பதிவு அல்லது மறுபதிவுக்கு பழைய ஆர்.சி-யை இணைத்து விண்ணப்பிக்கலாம் எனவும், புதிய பதிவுக்கான கட்டணம் 20 ஆயிரம் ரூபாயாகவும்,  மறு பதிவுக்கான கட்டணம் 5 ஆயிரம் ரூபாயாகவும் உள்ளது என்றும் மத்திய அமைச்சரின் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்