தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா பாதிப்பு : டெல்டா வைரஸ் காரணம் - ஆய்வு முடிவு

தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா பாதிப்புக்கு காரணம் டெல்டா வைரஸ்தான் என தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...
x
இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுதுதற்கான காரணம் குறித்து ஆய்வை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்தி உள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம், குஜராத், கர்நாடகம் உள்பட 17 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் 677 பேரது மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. இவர்களில் 604 பேர் கோவிஷீல்டு தடுப்பூசியும், 71 பேர் கோவேக்சின் தடுப்பூசியும், வெளிநாடுகளில் சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட 2 பேர்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 85 பேருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்ட பின்னரும், 592 பேருக்கு இரண்டு டோசையும் போட்டுக்கொண்ட நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 86.09 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போட்ட நிலையிலும் கொரோனா தொற்று ஏற்பட டெல்டா வைரசே காரணம் என தெரியவந்துள்ளது. 482 பேர் அறிகுறிகளுடனும், எஞ்சியவர்கள் அறிகுறிகள் இன்றியும் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர் என்றும், மார்ச்-ஜூன் மாதங்களில்தான் டெல்டா வைரஸ் ஆதிக்கம் அதிகமாக இருந்துள்ளது என்றும் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 9.8 சதவீதத்தினர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்றும் இறப்பு விகிதம் 0.4 சதவீதம்தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்