ஆண்டிற்கு 300 நாட்கள் உறங்கும் நபர் - 2 நிமிடம் மட்டுமே விழித்திருக்கும் நிலை

ராஜஸ்தான் மாநிலத்தில் வினோத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர், ஆண்டிற்கு 300 நாட்கள் உறங்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
ராஜஸ்தான் மாநிலத்தின் பார்பட்சர் பகுதியை சேர்ந்தவர் புக்காராம். ஆக்சிஸ் ஹைப்பர்சோம்னியா எனும் வினோத நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர், ஒரு ஆண்டில் 300 நாட்கள் தூங்குகிறார். இதனால் புக்காராம் உணவு உண்பது, குளிப்பது கூட அவரது மனைவியின் உதவியுடன் தூக்கத்தில் தான் நடக்கிறது. ஒரு முறை தூங்கி விட்டால் புக்காராம் விழிக்க 3 முதல் 4 மணி நேரம் ஆகிறது. அப்போதும் அவரால் 2 நிமிடம் மட்டுமே விழித்திருக்க முடியுமென வேதனையுடன் கூறுகிறார் புக்காராமின் மனைவி. தற்போது ஒரு மாதத்தில் 25 நாட்கள் தூங்கும் புக்காராம், ஒரு ஆண்டில் சராசரியாக 300 நாட்கள் தூங்கி வருகிறார். இதுகுறித்து கூறிய புக்காராம், "தனக்கு வேறந்த பாதிப்பும் இல்லை எனவும், எப்போதும் அசதி ஏற்பட்டு தூங்கி விடுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்