இந்தியாவில் பாதுகாப்பு அச்சம் உள்ளது - ஏஜென்சி நிறுவனம் கடத்தியதாக முகுல் சோக்‌ஸி புகார்

50 நாட்களுக்கு மேலாக கடத்தப்பட்டிருப்பதாக கூறி வந்த வைர வியபாரி முகுல் சோக்ஸி, இந்தியாவில் பாதுகாப்பு அச்சம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பாதுகாப்பு அச்சம் உள்ளது - ஏஜென்சி நிறுவனம் கடத்தியதாக முகுல் சோக்‌ஸி புகார்
x
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்
மோசடி செய்த குற்றச்சாட்டில் நீரவ் மோடியின் மாமாவான முகுல் சோக்ஸி 2018ம் ஆண்டு ஆண்டிகுவாவில் தஞ்சமடைந்தார். வங்கி மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கடந்த மே மாதம் 23ம் தேதி ஆண்டிகுவாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து படகு மூலம் முகுல் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடத்தல் பற்றி எந்தவித தகவல்களும் வெளியாகாத நிலையில் தனி விமானம் மூலம் ஆண்டிகுவாவிற்கு முகுல் சோக்ஸி வந்துள்ளார். இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தை தொடர்பு கொண்ட முகுல் சோக்ஸி, இந்தியாவை சேர்ந்த சில ஏஜென்சி நிறுவனத்தார் சந்திக்க வந்ததாகவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தும் தன்னை கடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த கடத்தலால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறும் முகுல்சோக்ஸி, ஆரோக்கியமான மனநிலை மற்றும் உடல்நலத்துடன் இந்தியா திரும்புவது கடினம் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்