18 ஆம் தேதி அனைத்துகட்சி கூட்டம் : கொரோனா பாதிப்பு - பிரச்சனை எழுப்ப திட்டம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற திங்கட்கிழமை துவங்கவுள்ள நிலையில் 18 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது.
18 ஆம் தேதி அனைத்துகட்சி கூட்டம் : கொரோனா பாதிப்பு - பிரச்சனை எழுப்ப திட்டம்
x
கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை, பெட்ரோல் டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு,உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில்  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் கூட்டத்தொடரில் பல்வேறு கட்சிகளில் எழுப்ப விரும்பும் பிரச்சினைகள் குறித்தும் அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாகவும் அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதே போல மக்களவை, மாநிலங்களவைத் சார்பிலும்  கூட்டத்திற்கும் அன்றைய தினம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டமும் அன்றைய தினம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்