லடாக்கில் 100 % முதல் டோஸ் செலுத்தப்பட்டது

இந்தியாவில் முதல் யூனியன் பிரதேசமாக லடாக்கில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
லடாக்கில் 100 % முதல் டோஸ் செலுத்தப்பட்டது
x
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. வடக்கு எல்லை யூனியன் பிரதேசமான லடாக் குறைந்த மக்கள் தொகை கொண்ட பிரதேசமாக இருந்தாலும், சீரற்ற வானிலை, மலைப்பாங்கான இடங்கள், சாலை வசதியில்லாத மிக நீண்ட தொலைவில் தனியாக அமைந்திருக்கும் கிராமங்கள் போன்ற அம்சங்கள் சுகாதார பணியாளர்களுக்கு சவாலாக அமைந்தது. இந்த சவால்களையும் தாண்டி மருத்துவ உபகரணங்களுடன் நீண்ட தொலைவு நடந்துச் சென்று சுகாதார பணியாளர்கள் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பாராட்டத்தக்க பணியை மேற்கொண்டனர்.

இதனால் லடாக்கில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. லடாக் மக்கள் தொகையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 89 ஆயிரத்து 404 பேர். அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசியின் முதல் போடப்பட்டுள்ளது. 60 ஆயிரத்து 936 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. லடாக்கில் வசிக்கும் நேபாள நாட்டு குடிமக்கள் 6 ஆயிரத்து 821 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. லடாக்கில் தங்கியிருந்து வேலை பார்க்கும் ஓட்டல் பணியாளர்கள், டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் கூலி தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்