"ஜிகா வைரஸை தடுக்க நடவடிக்கை" - சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்

ஜிகா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளுக்காக, செயல்திட்டம் வகுத்து உள்ளதாக, கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்
ஜிகா வைரஸை தடுக்க நடவடிக்கை - சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்
x
ஜிகா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகளுக்காக, செயல்திட்டம் வகுத்து உள்ளதாக, கேரளா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில், மருத்துவமனைகளை மையமாகக் கொண்டு துரிதமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கியதாக தெரிவித்தார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளை ஜிகா
வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொள்ள, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். கர்ப்பமடைய வாய்ப்புள்ள பெண்கள், கொசு கடியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்