ஹெர்பிஸ் வைரஸ் தாக்குதல்;2 குட்டி யானைகள் உயிரிழப்பு - ஏனைய யானைகளுக்கு மருத்துவ கண்காணிப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே யானைகள் பராமரிப்பு நிலையத்தில் இருந்த 2 குட்டி யானைகள் ஹெர்பிஸ் வைரஸ் தாக்கி உயிரிழந்த நிலையில், ஏனைய குட்டி யானைகள் 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
ஹெர்பிஸ் வைரஸ் தாக்குதல்;2 குட்டி யானைகள் உயிரிழப்பு - ஏனைய யானைகளுக்கு மருத்துவ கண்காணிப்பு
x
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே யானைகள் பராமரிப்பு நிலையத்தில் இருந்த 2 குட்டி யானைகள் ஹெர்பிஸ் வைரஸ் தாக்கி உயிரிழந்த நிலையில், ஏனைய குட்டி யானைகள் 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.கோட்டூர் பகுதியில் வனத்துறையின் யானைகள் பராமரிப்பு நிலையத்தில், ஒன்றரை வயது ஸ்ரீ குட்டி மற்றும் 4 வயது அர்ஜுன் ஆகிய 2 குட்டி யானைகள் ஹெர்பிஸ் வைரஸ் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே பராமரிப்பு நிலையத்தில் உள்ள பொடிச்சி, கண்ணன், ஆமினா ஆகிய மேலும் 3 குட்டி யானைகளுக்கு ஹெர்பிஸ் வைரஸ் தாக்கிய நிலையில், அவை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளன. இதனால் எர்ணாகுளம், பத்தினம்திட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடை மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அனைத்து யானைகளும் 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. இவ்வகை வைரஸ் தாக்கினால் வெறும் 48 மணி நேரத்திற்குள் யானை உயிரிழந்து விடும் என்றும், 10 வயதிற்குட்பட்ட யானைகளே இத்தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் யானைகளின் உயிரிழப்பைத் தடுக்க தேவையான மருந்துகள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்