மத்திய அமைச்சரவை விரிவாக்கம் - வரும் வியாழன் அறிவிப்பு வெளியாகும்?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அமைச்சரவை விரிவாக்கம் வரும் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
x
பீஹாரை சேர்ந்த பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சிகும் அமைச்சரவையில் இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கட்சித் தலைமையுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தங்களுக்கு மத்திய அமைச்சரவையில் நான்கு அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 2 கேபினட் அமைச்சர் பதவிகளையும் 2 இணை அமைச்சர் பதவிகளையும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கேட்டு வருகிறது. பீகாரில் பாரதிய ஜனதா கட்சி எம்பிக்கள் 17 பேர் உள்ளனர். அவர்களில் ஐந்துபேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். ஆனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவர்கள் 16 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் ஒருவர் கூட அமைச்சராக இல்லை. இதன் அடிப்படையில் தங்களுக்கு நான்கு அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி கோரி வருகிறது. கேட்ட படி, அமைச்சர் பதவி ஒதுக்காவிட்டால், அமைச்சரவையில் பங்கேற்க போவதில்லை என அக்கட்சி முடிவு செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்