ரத்த சோகையை போக்க திட்டம்..செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தி - அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை

செறிவூட்டப்பட்ட அரிசியின் உற்பத்தி திறனை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ரத்த சோகையை போக்க திட்டம்..செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தி  - அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை
x
ரத்த சோகையை போக்க திட்டம்..செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தி  - அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை  

செறிவூட்டப்பட்ட அரிசியின் உற்பத்தி திறனை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாட்டில் பரவலாக காணப்படும் ரத்த சோகை மற்றும் நுண்ணூட்ட சத்துக் குறைபாட்டை போக்க செறிவூட்டப்பட்ட அரிசியின் கொள்ளளவை 15 ஆயிரம் மெட்ரிக் டன்னில் இருந்து மூன்றரை 
லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொளப்பட்டுள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரிசி ஆலை உற்பத்தியாளர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.174 புள்ளி 64 கோடி ரூபாய்  மதிப்பில்  3 வருடங்களுக்கு செயல்படுத்தும் வகையில் "வலுவூட்டப்பட்ட அரிசி மற்றும் பொது விநியோக திட்டத்தின் கீழ் அதன் விநியோகம்" என்ற திட்டத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது. இந்த  திட்டம் முதற்கட்டமாக தமிழ்நாடு ,  ஆந்திரா குஜராத் , மஹாராஷ்டிரா, சட்டிஸ்கர்,  உத்தர பிரதேஷம் ஆகிய 6 மாநிலங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்