பொருளாதார தொகுப்பு திட்டம் - முக்கிய அம்சங்கள்

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பொருளாதார தொகுப்பு திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பற்றிப் பார்க்கலாம்.
x
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பொருளாதார தொகுப்பு திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பற்றிப் பார்க்கலாம்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக விசா வழங்கப்படும்...

அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அல்லது 5 லட்சம் விசா வழங்கும் வரை இந்தத் திட்டம் நடைமுறையில் இருக்கும் என்றும்...

இதன் மூலம் அரசுக்கு 100 கோடி ரூபாய் நிதிச் சுமை ஏற்படும்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறைக்கு ஊக்கம் அளிக்கும் விதமாகவும் மீண்டும் தொழில் தொடங்க ஏதுவாகவும் தனிநபர் கடன் மற்றும் நடைமுறை மூலதன கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கப்பட உள்ளது.

மத்திய சுற்றுலா அமைச்சகம் மற்றும் மாநில அரசால்
அங்கீகரிக்கப்பட்டுள்ள 10,700 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு
1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்
என்றும்....

சுற்றுலா நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை 100% உத்தரவாதத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநகரங்களில் உள்ள 25 லட்சம் தனி நபர்களுக்கு தலா 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்படும் எனவும்,

இதேபோல, விவசாயிகளின் உர மானியத்திற்கு கூடுதலாக
14 ஆயிரத்து 775 கோடி வழங்கப்படும் என்றும்,

உரத்தின் விலை ஏற்றத்தை கருத்தில் கொண்டு இந்த நிதியாண்டில் உர மானியம் 42 ஆயிரத்து 275 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டிஏபி உரத்திற்கு கூடுதல் மானியமாக 9125 கோடி மற்றும் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான மானியமாக 5 ஆயிரத்து 650 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்
நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்