டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று - நாட்டில் 40 பேருக்கு உள்ளதாக தகவல்

டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று நாட்டில் 40 பேருக்கு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று - நாட்டில் 40 பேருக்கு உள்ளதாக தகவல்
x
டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று நாட்டில் 40 பேருக்கு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மற்றும் ஜல்கான் மாவட்டங்களிலும், கேரளாவின் பாலக்காடு மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களிலும், மத்தியப் பிரதேசத்தின் போபால் மற்றும் சிவபுரி மாவட்டங்களிலும் இந்த வகை கண்டறியப்பட்டுள்ளதாக இந்த மூன்று மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். அதிகமாக பரவக்கூடிய தன்மை, நுரையீரல் செல்களின் ரிசப்டார்களுடன் வலுவாக ஒட்டக் கூடிய தன்மை மற்றும் பிற பொருள் எதிரிகளின் எதிர்வினையை குறைக்கும் தன்மையை இந்த  வகை கொரோனா தொற்று கொண்டுள்ளதாக இன்சாகோக் தெரிவித்துள்ளது. ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பொது சுகாதார எதிர்வினை நடவடிக்கைகளில் இன்னும் கவனம் செலுத்துமாறு மகாராஷ்டிரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசத்தை மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்