கோவாக்சின் தடுப்பூசி செயல்தன்மை-77.8% : மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள் வெளியீடு

கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் மருந்தின், செயல்படும் தன்மை 77 புள்ளி 8 சதவிகிதம் என, நிபுணர் குழு நடத்திய மூன்றாம் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
x
கொரோனா தடுப்பூசியான கோவேக்சின் மருந்தின், செயல்படும் தன்மை 77 புள்ளி 8 சதவிகிதம் என, நிபுணர் குழு நடத்திய  மூன்றாம் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின், தடுப்பூசி குறித்து இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், மூன்றாம் கட்ட ஆய்வு குறித்த தரவுகள் மத்திய மருந்து மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவத்தின் நிபுணர் குழு தாக்கல் செய்த ஆய்வறிக்கையில், கோவேக்சின், வைரசுக்கு எதிராக 77 புள்ளி எட்டு சதவிகிதம் சிறப்பாக செயல்படும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகள் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதன் பிறகு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணைய நிபுணர் குழு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை பொதுவெளியில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளை பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும், உலக சுகாதார நிறுவனத்துக்கும் இடையே  தடுப்பூசி சமர்ப்பித்தலுக்கு முந்தைய கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது கட்ட சோதனை தரவுகளை இந்தியா ஆய்வு செய்வது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்