மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் - ஹைதராபாத்தில் பிறந்த சத்ய நாதெல்லா

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவராக, அதன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றும் சத்ய நாதெல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் - ஹைதராபாத்தில் பிறந்த சத்ய நாதெல்லா
x
ஹைதராபாத்தில் 1967இல் பிறந்த சத்ய நாதெல்லா, மணிப்பால் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்சாரவியலில் பட்டம் பெற்றார். 1990இல் அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில், கணினி பொறியியலில் முதுகலைப் பட்டமும், 1996இல் சிகாகோ பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றார். சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய சத்ய நாதெல்லா, பில் கேட்ஸால் தொடங்கப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 1992இல் சேர்ந்தார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவில் பணி புரிந்த நாதெல்லா, பின்னர் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் (cloud computing) துறையில் மைக்ரொசாப்ட் நிறுவனத்தை முன்னணி நிறுவனமாக வளர்த்தெடுத்தார். மைக்ரோசாப்ட் க்ளவ்ட் (cloud) சேவை பிரிவின் வருவாயை 1.22 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 1.50 லட்சம் கோடியாக மூன்றே ஆண்டுகளில் அதிகரிக்கச் செய்து சாதனை படைத்தார். நாதெல்லா. இதைத் தொடர்ந்து 2014இல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார், சத்யா நாதெல்லா. லிங்கிட் இன், நுவான்ஸ் கம்யூனிகேசன்ஸ், ஸெனிமாக்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்களை பல நூறு கோடி டாலர்கள் விலைக்கு வாங்கி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனங்களாக அவர் மாற்றினார். 2014இல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பின், அதன் பங்குகளின் விலை 7 ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது, சத்யா நாதெல்லாவின் சாதனைக்கு சான்று....

Next Story

மேலும் செய்திகள்