ஜூன் 3 முதல் தென்மேற்கு பருவமழை - வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், ஜூன் 3 முதல் காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 3 முதல் தென்மேற்கு பருவமழை - வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை
x
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், ஜூன் 3 முதல் காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில், டவ்-தே, யாஸ் புயலை தொடர்ந்து ஜூன் 3 முதல் தென்மேற்கு பருவமழை பெய்யும் என்பதால், அடுத்த 5 நாட்களுக்கு ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர்  மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, பத்தனம்திட்டா  பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அணைகளின் நீர்மட்டத்தை  கண்காணிக்கும் நிலையில், மின்சார வாரியமும் தயார் நிலையில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்