தடுப்பூசி - மத்திய அரசின் உத்தரவு

தடுப்பூசிகளை விரைந்து செலுத்துவதற்கு ஏதுவாக திட்டம் வகுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தடுப்பூசி - மத்திய அரசின் உத்தரவு
x
தடுப்பூசி - மத்திய அரசின் உத்தரவு 

தடுப்பூசிகளை விரைந்து செலுத்துவதற்கு ஏதுவாக திட்டம் வகுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.மாநிலங்கள் தங்களிடம் இருப்பிலுள்ள தடுப்பூசிகளையும், வழங்கப்படும் தடுப்பூசிகளையும், விரைந்து செலுத்துவதற்கு ஏதுவாக ஜூன் மாதம் இறுதி வரைக்கான திட்டத்தை வரையறுக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை தவிர்த்து , நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யவும், கண்காணிக்கவும் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.தனியார் மருத்துவமனைகளையும் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிகளை செலுத்த ஆன்லைன் பதிவையே பின்பற்ற வேண்டும், வேறு வழிமுறைகளை பின்பற்ற கூடாது என தெரிவிக்க பட்டுள்ளது.தொலைதூரப்பகுதி, ஊரக பகுதி, எளிதில் அணுக முடியாத பகுதி, மலைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் திட்டத்தை உடனடியாக  உருவாக்க உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது. சுகாதாரப்பணியாளர்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத  பாலூட்டும் தாய்மார்கள் இருந்தால் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்