அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகம், கேரளவில் மழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் உருவாகும் தாக்டே புயல் குஜராத்தில் 18-ம் தேதி கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகம், கேரளவில் மழைக்கு வாய்ப்பு
x
அரபிக்கடலில் உருவாகும் தாக்டே புயல் குஜராத்தில் 18-ம் தேதி கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வருகிறது. 

இந்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை 16-ம் தேதி தாக்டே புயலாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
புயல் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து குஜராத் மற்றும் பாகிஸ்தானின் கராச்சி கடலோரப் பகுதிகளை நோக்கி புயல் நகரக்கூடும் என்றும்

அவ்வாறு நகரும்பட்சத்தில் வரும் 18-ம் தேதி குஜராத் கடலோரப் பகுதியை தாக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் கன மழையும்

தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, இடுக்கி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


அடுத்துவரும் நாட்களில் கர்நாடகா, கோவா, மராட்டியம், குஜராத் கடற்கரையையொட்டி பகுதிகளில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் மேலும் வலிமை பெறும் போது 120 மீட்டர் வரையில் செல்லும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்