ரெம்டெசிவிர் பற்றாக்குறை தடுப்பு நடவடிக்கை - வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி

ரெம்டெசிவிர் தட்டுப்பாடை சமாளிப்பதற்காக, அதனை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
ரெம்டெசிவிர் பற்றாக்குறை தடுப்பு நடவடிக்கை - வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்காக்கும் மருந்தான ரெம்டெசிவிரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையை சமாளிக்க, ரெம்டெசிவிரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது. அதன்படி அமெரிக்கா மற்றும் எகிப்து மருந்து நிறுவனங்களிடம் 4 லட்சத்து 50 ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள் கோரப்பட்டிருக்கிறது. அமெரிக்க நிறுவனத்திடமிருந்து வருகின்ற மே 15-க்குள் 1 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் இந்தியா வந்தடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தின் ஈவா பார்மா நிறுவனம், முதற்கட்டமா 10 ஆயிரம் குப்பிகளை வழங்குவதோடு, 15 நாட்களுக்கு ஒருமுறை 50 ஆயிரம் குப்பிகள் வீதம் ஜுலை வரை வழங்குகிறது. இதேபோல் ரெம்டேசிவிரின் மருந்தின் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்