கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கை - மாநில அரசுகளுக்கு அறிவுரை

கொரோனா பரவலை குறைக்க அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.
கொரோனா பரவலை குறைக்க நடவடிக்கை - மாநில அரசுகளுக்கு அறிவுரை
x
அதில், தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து,  தடுப்பு ஊசி செலுத்தி கொள்வோர் 100 சதவிகிதம் இலக்கு நிர்ணயித்து செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளது. விளையாட்டு, பொழுதுபோக்கு, மதம் சார்ந்த ஒன்று கூடுதல் களை தடுக்குமாறும், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளிவருவதை தடுக்கும் வகையில், தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருக்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. ஆக்ஸிஜன் மருந்து பொருட்கள், தடுப்பூசிகள் உள்ளிட்டவை எவ்வளவு கையிருப்பு இருக்கிறது, ரெம்டெசிவர்  உள்ளிட்ட மருந்துகள் எவ்வளவு உள்ளது என்ற விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு நம்பிக்கையை உருவாக்க முடியும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எவ்வளவு படுக்கைகள் காலியாக உள்ளது உள்ளிட்ட விபரங்களை தினந்தோறும் ஊடகங்களின் வாயிலாக மாநில அரசுகள் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்